எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் மின்னத்துல்லா முன்னிலை வகித்தார். எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆரிப் பாட்ஷா, எஸ்.டி.பி.ஐ. கட்சி புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராஷா ஆகியோர் பேசினார்கள். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் கனி, செயலாளர் அன்வர்ஷா, பர்கிட் அலாவுதீன், புறநகர் மாவட்ட துணை தலைவர் மஜித், வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story