அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்கள் உணவு உண்பதற்கு உணவு கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மேலும் இந்த பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சியும் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் பல்வேறு படைப்புகளை படைத்து காட்சிக்கு வைத்திருந்தனர். வட்டாரக்கல்வி அலுவலர் சீனிவாசன் உணவுக்கூடத்தினை திறந்து வைத்தார். வட்டாரக்கல்வி அலுவலர் முருகேசன் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார். முடிவில் பட்டதாரி ஆசிரியை வளர்மதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சாந்தனா, வெற்றி வேல்செழியன், செல்வம், சுந்தர மூர்த்தி, ராஜநாரயணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story