அறிவியல் கண்காட்சி
தென்காசி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது
தென்காசி சிதம்பர சுபா லுமினஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக நகர சபை தலைவர் சாதிர், துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் குற்றாலம் சக்தி ரோட்டரி சங்க நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, அனிதா மற்றும் நகர சபை கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் மழை நீர் சேமிப்பின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாத்தல், வனத்தை பாதுகாத்தல், காற்றாலையில் இருந்து மின்சாரம் தயாரித்தல், விவசாயத்தின் பயன் உள்ளிட்ட 120 அறிவியல் மாதிரிகள் மற்றும் செய்முறை விளக்கங்கள் வைக்கப்பட்டு இருந்தன. மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இது குறித்து விளக்கம் அளித்தனர்.