நாமக்கல்லில் அறிவியல் கண்காட்சி
நாமக்கல்
நாமக்கல் ஒன்றியத்தில் கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் சார்ந்து அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று வானவில் மன்ற நிகழ்வுகள் சார்ந்த போட்டிகளான அறிவியல் கண்காட்சி, அறிவியல் நாடகம் உள்ளிட்டவை வட்டார வளமைய அலுவலகத்தில் நடத்தப்பட்டது. 2023-ம் ஆண்டை ஐ.நா. சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ள காரணத்தினால் சிறுதானிய வகை பயன்பாடுகள் சார்ந்த தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது.மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா ஆகியோர் போட்டிகளை பார்வையிட்டனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசிராணி, ஆசிரியர் பயிற்றுனர்கள் கிருஷ்ணலட்சுமி, கோமதி, கோகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story