கூட்டுறவு வங்கிகளை சேவை சங்கங்களாக மாற்றும் திட்டம்


கூட்டுறவு வங்கிகளை சேவை சங்கங்களாக மாற்றும் திட்டம்
x

மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேவை சங்கங்களாக மாற்றும் திட்டத்தினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல் சேவை சங்கங்களாக மாற்றுதல் திட்டத்தின் கீழ் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி மூலம் வாங்கப்பட்ட வள்ளியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2 புதிய கனரக வாகனங்களை பயன்பாட்டிற்கு கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த வாகனங்களை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் அறிவுறுத்தலின்படி பொது வினியோக திட்டத்தில் நகர்வு பணியில் தனியார் வாகனங்களை தவிர்க்கும் பொருட்டு இச்சங்கம் மூலம் நகர்வுபணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி விருதுநகர் மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலையுடன் சங்கமானது புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிவகாசி பகுதிகளில் பொது வினியோக திட்ட நகர்வு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

இதன் மூலம் சங்கத்திற்கு சராசரியாக வாகனம் ஒன்றிற்கு மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க அலுவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

1 More update

Next Story