திருமருகல் பகுதியில் பரவலாக மழை


திருமருகல் பகுதியில் பரவலாக மழை
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சுட்டெரித்த வெயில்

நாகை அருகே திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர காலத்தில் போல் கடும் வெயில் சுட்டெரித்து வந்தது.

இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர்.

பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம், இரவிலும் காணப்பட்டது. வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்ட குளிர்ச்சியாக பொருட்களை நாடி சென்றனர்.

பரவலாக மழை

இந்த நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.திருமருகல், அண்ணாமண்டபம், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, போலகம், திருப்புகலூர், சியாத்தமங்கை, திட்டச்சேரி, கட்டுமாவடி, ஆதினங்குடி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த மழையால் குறுவை பயிர்களுக்கு போதிய அளவு நீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story