அரசு பள்ளிகளில் அடுத்தடுத்து மோசடி - அதிர்ச்சியில் அதிகாரிகள்


அரசு பள்ளிகளில் அடுத்தடுத்து மோசடி - அதிர்ச்சியில் அதிகாரிகள்
x

பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை திருத்தி மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை திருத்தி மோசடி செய்வது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை கல்வித்துறை கண்டுபிடித்துள்ளது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் வெளியிட்ட அறிவிப்பில், கோலியனூர் வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், முறைகேடு நடந்த பள்ளியை கண்காணிக்க தவறியதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவும், தமிழகம் முழுவதும் திடீர் ரெய்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

1 More update

Next Story