தமிழகத்தில் மணல் கொள்ளையை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும்


தமிழகத்தில் மணல் கொள்ளையை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும்
x

பல்வேறு உத்தரவை கோர்ட்டுகள் பிறப்பித்தும் தொடர்வதா? என்றும் தமிழகத்தில் மணல் கொள்ளை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மதுரை

பல்வேறு உத்தரவை கோர்ட்டுகள் பிறப்பித்தும் தொடர்வதா? என்றும் தமிழகத்தில் மணல் கொள்ளை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை

கரூர் மாவட்டம், சாணப்பிராட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர், கரூர் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த ஆற்றுப்படுகையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டி, மணல் திருடப்படுகிறது. இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் ஆற்று மணலை திருடி வருகின்றனர்.

இதற்காக ஆற்றுப்படுகையில் பாதை அமைத்து, மணல் கொள்ளை நடக்கிறது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை.

எனவே, எங்களின் மனுவின் அடிப்படையில் அமராவதி ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையை தடுக்கவும், இதற்காக ஆற்றுப்பகுதியில் அமைத்த பாதையை அகற்றிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

கட்டுப்படுத்த வேண்டும்

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மணல் கொள்ளையை தடுப்பதற்கு ஐகோர்ட்டுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இருந்தும் மணல் கொள்ளை தொடர்ந்து நடப்பது எப்படி? என கேள்வி எழுப்பினர்.

பின்னர் தமிழகத்தில் மணல் கொள்ளையை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

========

----


Related Tags :
Next Story