இட ஒதுக்கீட்டு போராளிகளுக்கு வீரவணக்கம்


இட ஒதுக்கீட்டு போராளிகளுக்கு வீரவணக்கம்
x

இட ஒதுக்கீட்டு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அரியலூர்

கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு 21 பேர் இறந்தனர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். அந்தவகையில், அரியலூர் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் உருவப்படத்திற்கு பா.ம.க. நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர செயலாளர் பரசுராமன் தலைமையிலான நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராமதாஸ், நகரத்தலைவர் ரெங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், ஆச்சி இளங்கோவன், தினகரன் மற்றும் அனைத்து வன்னியர் சங்க மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்.


Next Story