அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்ரூ.32 லட்சத்திற்கு பருத்தி விற்பனை


அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்ரூ.32 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 9 Aug 2023 1:00 AM IST (Updated: 9 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,260 மூட்டை பருத்தியை விற்பனைக்கு ெகாண்டு வந்தனர். இதில் பி.சி. ரக பருத்தி குவிண்டால் ரூ.6,019 முதல் ரூ.7,780-க்கும், கொட்டு பருத்தி ரூ.3,000 முதல் 5,496-க்கும் ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் ரூ.32 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.


Next Story