ஆர்.எஸ்.எஸ். தேவைகளை பூர்த்தி செய்யவே அக்னிபத் திட்டம் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு


ஆர்.எஸ்.எஸ். தேவைகளை பூர்த்தி செய்யவே அக்னிபத் திட்டம் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு
x

ஆர்.எஸ்.எஸ். தேவைகளை பூர்த்தி செய்யவே அக்னிபத் திட்டம் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம்சாட்டி பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி ஐந்து விளக்கு அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அக்னிபத் திட்டத்தின் மூலம், நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி வருங்காலத்தில் ஆயுத பயிற்சி பெற்ற தனியார் படையை கட்டமைத்து அதனை ஆர்.எஸ்.எஸ். தேவைக்கு பூர்த்தி செய்ய பா.ஜனதா கட்சி முயற்சி மேற்கொள்கிறது. இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேற்றப்படுவார்கள்.

அதன்பின் ராணுவத்தினருக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அவ்வாறு வெளியேற்றப்படுபவர்களை மூளைச்சலவை செய்து அவர்களை ஆயுதப்பயிற்சி பெற்ற தனியார் படை அமைப்பாக கட்டமைத்து சமுதாயத்தில் ஊடுருவச் செய்து சாதி, மத கலவரங்களை ஏற்படுத்தி சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் அவர்களை ஈடுபடுத்தி ஆர். எஸ். எஸ். திட்டங்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். நாடு முழுவதும் இந்த சந்தேகம் எழுந்து உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story