சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 14 திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி தகவல்


சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 14 திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி தகவல்
x

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை

சென்னை மாநகராட்சியில் புதிதாக 8 பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள், நீர்நிலை மேம்பாட்டுப் பணி, மீன் சந்தை, பள்ளிக்கட்டிடங்கள் என மொத்தம் 14 திட்டப்பணிகளுக்கு சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.24 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள திறந்த வெளி ஒதுக்கீட்டில் 2 பூங்கா, கண்ணகி நகர், எழில் நகர், மணலி பொன்னியம்மன் நகர், மணலி புதுநகர் 3-வது தெரு, வளசரவாக்கம் தமிழ் நகர், குறிஞ்சி நகர் என 8 பகுதிகளில் பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் ரூ.4 கோடியே 28 லட்சம் மதிப்பில் அமைய உள்ளது.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் குளம் ரூ.2 கோடியே 99 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளது. சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2 கோடியே 69 லட்சம் மதிப்பில் 102 கடைகள் கொண்ட மீன் சந்தை புதிதாக அமையும். திருவல்லிக்கேணி, எல்லீஸ்புரம் சென்னை நடுநிலைப்பள்ளி, பெரம்பூர் மார்கெட் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி, புதிய காமராஜ் நகர் சென்னை நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 3 புதிய பள்ளிக் கட்டிடங்கள் ரூ.12 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story