போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி
போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
புதுக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரும் பாதிக்கப்பட்ட சிலரும் சேர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் மனு கொடுத்தனர். அதில், புதுக்கோட்டை சீனிவாசா நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் தான் புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் இன்பார்மராக வேலை பார்ப்பதாகவும், தனக்கு மேல் அதிகாரிகளுக்கும் பழக்கம் என்று கூறி எனது மகன் பிரச்சாவிற்கு போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் கடந்த 28.9.2022 அன்று பெற்றார். மேலும் அன்றைய தினமே பத்திரத்தில் எழுதி கையொப்பம் இட்டு வாங்கி சென்றார். இதுசம்பந்தமாக கேட்ட போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வந்தார். அவர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது வீட்டிற்கு கேட்க சென்ற போது வீடு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது கார்த்திக் இதுபோல் பல நபர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.