அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
x
Gokul Raj B 5 Sept 2022 5:59 AM IST
t-max-icont-min-icon

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என அறிவித்தார்.

இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. உதவித்தொகை பெறும் மாணவிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யும் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 5-ம் தேதி (இன்று) ஆசிரியர் தினத்தன்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க விழா மற்றும் மாதிரிப் பள்ளிகள், சீர்மிகு பள்ளிகள் தொடக்க விழாவில் டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

உயர்கல்வி உறுதி திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற 90 ஆயிரம் மாணவிகள் தேர்வாகியுள்ளதாகவும், முதற்கட்டமாக சுமார் 1 லட்சம் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Next Story