ஹஜ் பயணத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்


ஹஜ் பயணத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
x

ஹஜ் பயணத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் இல்லத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியாதாவது:-

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 1,500 பேர் ஹஜ் பயணம் செல்ல உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் 1500 பேர் ஹஜ் பயணம் செல்கின்றனர்.

ஹஜ் பயணம் கேரளாவில் இருந்து தொடங்கும் என்றும் பயணத்திற்கான உணவு, இருப்பிடச்செலவை அரசே ஏற்கும்.

உலமாக்க நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படும். ஓய்வு பெற்ர உலமாக்களுக்கு ரூ.25,000 ஆயிரத்தில் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று கூறினார்.


Next Story