கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திற்கான சாலை அமைக்கும் பணிகள்அமைச்சர் சேகர்பாபு ஆய்வு


கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திற்கான சாலை அமைக்கும் பணிகள்அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
x
சென்னை

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான சேகர்பாபு தலைமையில் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும், அந்தப் பணிகளுடன் சேர்ந்து நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்தும் இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக, அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரை, சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் நல்லம்பாக்கம் வரை, ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரை சாலை அமைக்கும் பணிகளையும், முடிச்சூரில் புதிதாக அமையவுள்ள ஆம்னி பஸ் நிறுத்திமிடத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, பூங்காக்களில் நடைபெற்று வரும் பணிகள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைய உள்ள மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை செய்தார். இக்கூட்டத்தில், பஸ்களை இயக்கும் பணிகளை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும்ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் முதல்கட்ட கணக்கெடுப்பு பகுப்பாய்வு அறிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.


Next Story