கும்பகோணம் - மன்னார்குடி சாலையை அகலப்படுத்தும் பணி
கும்பகோணம்- மன்னார்குடி சாலையை அகலப்படுத்தும் பணியை தொழிற்தட திட்ட தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
கும்பகோணம்- மன்னார்குடி சாலையை அகலப்படுத்தும் பணியை தொழிற்தட திட்ட தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
அகலப்படுத்தும் பணி
சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் மற்றும் வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட திட்ட தலைமைப் பொறியாளர் செல்வம் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வு
தலைமை பொறியாளர் ஆய்வின்போது திருச்சி கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், கோட்ட பொறியாளர் நாகராஜன், இதர பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உடனிருந்தனர். தலைமைப் பொறியாளர் பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
மேலும் பணியினை விரைவாக செயல்படுத்த உரிய ஆலோசனைகளை வழங்கினார்.