சீமைகருவேல மரங்களால் விபத்து அபாயம்
திண்டுக்கல்-வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் சீமைகருவேல மரங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல்லிருந்து வத்தலக்குண்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் பல இடங்களில் சீமைகருவேல மரங்கள் இருபுறமும் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மரங்களில் கிளைகள் அடர்த்தியாக வளர்ந்து கிடப்பதால் சாலை வளைவுகளில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. குறிப்பாக சேவுகம்பட்டி பிரிவு என்னும் இடத்தில் முட்செடிகள் அதிகளவில் உள்ளன. இந்த இடத்தில் எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் சீமைகருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story