மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு: உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறை, சட்டத்துறை செயலாளர்கள் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Related Tags :
Next Story