செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்கப்பட்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 32), இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்து விட்டார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பலத்த காயம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சங்கீதா கிணற்றில் விழுந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்த சங்கீதாவை மீட்டனர். பின்னர் படுகாயமடைந்த சங்கீதாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story