சத்திரப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை


சத்திரப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
x

சத்திரப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

சத்திரப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அடிப்படை வசதி

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் 80-க்கும் மேற்பட்ட பேண்டேஜ் கம்பெனிகள், 10-க்கும் மேற்பட்ட எக்ஸ்போர்ட் நிறுவனங்கள், 600-க்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழில் வாய்ப்புகள் இங்கு அதிகம் உள்ளதால் நாளுக்கு நாள் இங்கு குடியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மக்கள் தொகை அதிகரித்து வரும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. சத்திரப்பட்டியில் பஸ்நிலையம், மயான வசதி, வாருகால் வசதி, குப்பை கிடங்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இல்லை. அதேபோல இங்குள்ள கண்மாய் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

அதிகாரிகள் நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மசத்திரப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.க்கள் கூறியதாவது:-

சத்திரப்பட்டி தற்போது நன்கு வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்குள்ள தொழில்வளர்ச்சிக்கு தகுந்தபடி மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் சேரும் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. இங்கு குப்பை கிடங்கு இல்லாததால் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மயான வசதி, வாருகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. குவிந்து கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

ஆதலால் சத்திரப்பட்டி பகுதியில் குப்பை கிடங்கு உள்பட அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினா்.


Next Story