சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு: தமிழக அரசு அரசாணை


சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு: தமிழக அரசு அரசாணை
x

தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை பொறுத்து மின் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மின் பயன்பாட்டை பொறுத்து 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை பீக் அவர்ஸ் மின்கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, பருவகால தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின் பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்துக்கொள்ளும் வகையில் அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை குறைத்துக்கொள்ளவும், தேவைப்படும்போது அனுமதிக்கப்பட்ட மின் பளுவிற்கு உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக எந்த கூடுதல் கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை. இதனை ஆண்டுக்கு 4 முறை பயன்படுத்திக்கொள்ளலாம். சூரிய ஒளி சக்தி, மேற்கூரை, மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story