பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகள் மீட்பு


பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகள் மீட்பு
x

பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகளையும் போலீசார் மீட்டனர்.

சென்னை

பட்டினபாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை மணலில் 2 சாமி சிலைகள் புதைந்த நிலையில் காணப்பட்டது. அதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மயிலாப்பூர் உதவி கமிஷனர் சீனிவாசன் மேற்பார்வையில், பட்டினபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போலீசாருடன் விரைந்து 2 சிலைகளையும் மீட்டார். அதில் ஒரு சிலை பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை ஆகும். இன்னொரு சிலை சித்தரின் சிலை போன்று காணப்பட்டது.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பட்டினபாக்கம் கடற்கரை மணல் பகுதியில் புதைந்த நிலையில் சில சாமி சிலைகள் மீட்கப்பட்டது. அதோடு சேர்ந்த சிலைகளா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சிலையின் தொன்மை குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், தற்போது இந்த சிலைகள் மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்படும், என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story