ரேஷன் கடை, சாலை அமைக்கும் பணி


ரேஷன் கடை, சாலை அமைக்கும் பணி
x

ஜோலார்பேட்டை அருகே ரேஷன் கடை, சாலை அமைக்கும் பணியை தேவராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம், அண்ணான்டப்பட்டி ஊராட்சியில் ரூ.13 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்.ஏ.வுமான க.தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரேஷன் கடை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்தார்.

இதனைத் தொடர்ந்து அண்ணான்டப்பட்டி முதல் ஆரிக்கான் வட்டம் வரை ரூ.32 லட்சத்து 18 ஆயிரத்தில் புதிய தார் சாலை அமைக்கவும் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள 61 ஊராட்சிகளில் 12 ஊராட்சிகளுக்கு மட்டுமே காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 49 ஊராட்சிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அனைவருக்கும் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்படும். மேலும் திருப்பத்தூர்- வாணியம்பாடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை அமைக்க ரூ.326 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை பணிகள் முடிக்கப்பட்டு பயணிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை தொகுதிக்கு மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக முதல்-அமைச்சரிடம் எடுத்துக் கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Next Story