ராமேஸ்வரம், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கடலூரில் மீண்டும் நின்று செல்லும்
கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கடலூரில் மீண்டும் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
2 ஆண்டுகளாக கோரிக்கை
கடலூர் வழியாக தென்மாவட்டங்களுக்கும், வடமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை கடலூர் வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் துறைமுகம் ரெயில் நிலையங்களில் நின்று சென்றன. இதனால் கடலூர் மக்கள் எளிதில் வெளியூர் சென்று வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது. ஆனால் கடலூர் வழியாக தினசரி இயக்கப்படும் 10-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம் ரெயில் நிலையங்களில் நின்று சென்றன. கன்னியாகுமரி-புதுச்சேரி எக்ஸ்பிரஸ், காரைக்கால் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் நிறுத்தப்படவில்லை. இதனால் ரெயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இதன் காரணமாக கடலூர் வழியாக இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் திருப்பாதிரிப்புலியூர், துறைமுகம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்கள் மகிழ்ராமேஸ்வரம், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கடலூரில் மீண்டும் நின்று செல்லும்ச்சி
இந்த நிலையில் தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், மானாமதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16752) வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். அதேபோல் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (16780) வருகிற 20-ந் தேதி முதலும், நெல்லை, விருதுநகர், மானாமதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் கன்னியாகுமரி-புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (16862) வருகிற 24-ந் தேதி முதல் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திலும் மீண்டும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.