ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை


ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
x
தினத்தந்தி 23 Feb 2024 6:50 AM IST (Updated: 23 Feb 2024 7:04 AM IST)
t-max-icont-min-icon

கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்றும் நாளையும் ராமேஸ்வரம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் 2 நாட்கள் இந்த ஆலய திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த நிலையில் கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்றும் நாளையும் ராமேஸ்வரம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், தடையை மீறி மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story