ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13.50 அடி உயர்வு


ராமநதி அணை நீர்மட்டம்  ஒரே நாளில் 13.50 அடி உயர்வு
x

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13.50 அடியாக உயர்ந்தது.

தென்காசி

கடையம்:

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13.50 அடியாக உயர்ந்தது.

ராமநதி அணை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை உள்ளது. இந்த அணை மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள், 20-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து குறைந்ததால் நீர்மட்டம் 25 அடியும், அணையின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் தொடர்ந்து 5 கன அடியாகவும் இருந்தது. இதனால் அணை வறண்ட நிலையில் காணப்பட்டு, ஆங்காங்கே பாறைகள், கற்கள் தெரிந்தன.

13.50 அடி உயர்வு

இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மலைப்பகுதியில் இருந்து அணைக்கு நீர்வரத்து காணப்படும் இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

நேற்று முன்தினம் 25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 13.50 அடி உயர்ந்து 38.50 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 85 கன அடியும், வெளியேற்றம் 5 கன அடியுமாக உள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.




Next Story