நாமக்கல்லில்ஊன்றுகோல் தின விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி உலக ஊன்றுகோல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பார்வை உள்ளவர்களுக்கு கண் எவ்வளவு முக்கியமானதோ, அதுபோல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்று கோல் முக்கியமானது. இதை கடந்த 1947-ம் ஆண்டு ரிச்சர்ட் ஊவர் என்பவர் கண்டுபிடித்தார். இந்த நிலையில் நல்வாழ்வு பார்வையற்றோர் சங்கம் சார்பில், உலக ஊன்றுகோல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. சங்க தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். செயலாளர் ஞானபிரகாசம், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நுகர்வோர் புலனாய்வு கமிட்டி மாநில செயலாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்து பேசினார். முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் துணைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story