கனமழைக்கு கண்மாய் கரை உடைந்தது


கனமழைக்கு கண்மாய் கரை உடைந்தது
x

கனமழைக்கு கண்மாய் கரை உடைந்தது.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே சென்னகரம்பட்டி கிராமத்தில் உள்ளது காஞ்சரங்குளம்கண்மாய். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் அழகர்மலை பகுதியில் இருந்து பெருக்கெட்டுத்து வந்த வெள்ளம் இந்த காஞ்சரம்குளம்கண்மாயில் பெருகி கண்மாய் கரை உடைந்தது. இதன் காரணமாக தண்ணீர் வெளியேறி நெல் பயிரிட்ட வயல்களில் பாய்ந்து பயிர்கள் சேதம் அடைந்தது. மேலும், மேலவளவு செல்லும் வைகை பெரியாறு கால்வாய் கரையையும் உடைத்து தண்ணீர் நெல்பயிர்களை அடித்து சென்றது. இதனால் பல ஏக்கர் நிலங்கள் பாதிப்படைந்தன. பருவமழை தீவிரம் அடைவதற்குள் கண்மாய் கரை மற்றும் கால்வாய் கரை உடைப்புகளை நிரந்தரமாக அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story