தண்டவாள பராமரிப்பு பணி: சென்னையில் நாளை 44 மின்சார ரெயில்கள் ரத்து


தண்டவாள பராமரிப்பு பணி: சென்னையில் நாளை 44 மின்சார ரெயில்கள் ரத்து
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 10 Feb 2024 1:50 AM GMT (Updated: 10 Feb 2024 2:00 AM GMT)

தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சீபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது.

அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 10.30, காலை 10.40, காலை 10.50, காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50, மதியம் 1, மதியம் 1.15, மதியம் 1.30, மதியம் 1.45, மதியம் 2, மதியம் 2.15, மதியம் 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 10.05, காலை 10.15, காலை 10.25, காலை 10.45, காலை 10.55, காலை 11.25, காலை 11.35, மதியம் 12, மதியம் 12.15, மதியம் 12.45, மதியம் 1.30 மணி, மதியம் 1.45, மதியம் 2.15, மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 9.40, காலை 10.55, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்களும், காலை 9.30 மணிக்கு காஞ்சீபுரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் ரெயிலும், திருமால்பூர்- கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரெயில் என மொத்தம் 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, மதியம் 1.45 மதியம் 2.20, மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையே காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


Next Story