ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்
ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பறிமுதல் செய்து அதனை கோயம்பேடு மார்க்கெட்டில் காலியிடத்தில் கொட்டி அழித்தனர்.
சென்னை
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மாம்பழம் சீசனும் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாக சி.எம்.டி.ஏ. நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சதீஷ்குமார், சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையிலான குழு நேற்று அதிகாலை கோயம்பேடு பழம் மார்க்கெட்டில் ஒவ்வொரு கடைகளாக அதிரடியாக ஆய்வு செய்தனர். சுமார் 35 கடைகளில் சோதனை செய்ததில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 7 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அதனை கோயம்பேடு மார்க்கெட்டில் காலியிடத்தில் கொட்டி அழித்தனர்.
Related Tags :
Next Story