கர்நாடக தேர்தலுக்குப் பின் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கும் - கரூர் எம்.பி. ஜோதிமணி தகவல்


கர்நாடக தேர்தலுக்குப் பின் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கும் - கரூர் எம்.பி. ஜோதிமணி தகவல்
x

அ.தி.மு.க. தனித்து செயல்பட முடியாதவாறு பா.ஜ.க.வின் ஆளுமைக்குள் சிக்கியுள்ளது என ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை கடந்து காஷ்மீரில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கும் புதுக்கோட்டையில் கரூர் எம்.பி ஜோதிமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் அ.தி.மு.க. தனித்து செயல்பட முடியாதவாறு பா.ஜ.க.வின் ஆளுமைக்குள் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கர்நாடக சட்டமன்றத்திற்கு வரும் மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story