பழனியில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி
பழனியில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
பழனி அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு ஏற்படும் வெறிநோயை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம், பழனியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு கால்நடை துறை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார், நகராட்சி ஆணையர் கமலா ஆகியோர் கலந்துகொண்டு, தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனைகளை கொண்டு வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில், 200-க்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. மேலும் நாய் மற்றும் பூனைகளுக்கு சத்து மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இதுதவிர செல்ல பிராணிகள் பராமரிப்பு குறித்தும், விலங்குகள் மூலம் நோய் பரவுவதை தடுப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில் கால்நடை டாக்டர்கள் முருகன், செல்வகுமார் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.