விநாயகர் கோவிலில் புஷ்பாஞ்சலி


விநாயகர் கோவிலில் புஷ்பாஞ்சலி
x

செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் புஷ்பாஞ்சலி நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கும்பபூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு செக்கடி விநாயகருக்கு பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி பஜனை மண்டலி சார்பில் பக்தி பாடல்கள் பாடினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தர் பட்டர் செய்திருந்தார்.

1 More update

Next Story