மருது பாண்டியர்கள் மணிமண்டபத்தில் தூய்மை பணி
குருபூஜையை முன்னிட்டு மருது பாண்டியர்கள் மணிமண்டபத்தில் தூய்மை பணி நடந்தது
சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருது சகோதரர்களின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 24-ந் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் பேரூராட்சி சார்பில் மணிமண்டபத்தை சுற்றிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் ஆய்வு செய்தார். மணிமண்டபத்திற்கு எதிரே உள்ள பூங்காவை பார்வையிட்டு அதில் சேதமடைந்துள்ள நடைபாதைகள் மற்றும் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சரி செய்யவும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மருது பாண்டியர்களின் வாரிசுதாரர் குழு தலைவர் ராமசாமி, வார்டு கவுன்சிலர்கள் கோமதி உதயசண்முகம், சரண்யாஹரி, செயல் அலுவலர் தனுஷ்கோடி, துப்புரவு மேற்பார்வையாளர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்