122 கொள்முதல் நிலையங்களில் 49 ஆயிரத்து 158 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்


122 கொள்முதல் நிலையங்களில் 49 ஆயிரத்து 158 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறுவை பருவத்தில் 122 கொள்முதல் நிலையங்களில் 49 ஆயிரத்து 158 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023-24 -ம் ஆண்டு குறுவை பருவத்தில் திறக்கப்பட்ட 122 கொள்முதல் நிலையங்களிலிருந்து இதுவரை 49 ஆயிரத்து 158 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குண்டான தொகை ரூ.112 கோடியே 31 லட்சத்து 83 ஆயிரத்து 80 அளவில், 9 ஆயிரத்து 540 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. நெல் வரத்து குறைவின் காரணமாக 105 கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், குத்தாலம் தாலுகாவில் தேரிழந்தூர், 52வில்லியநல்லூரிலும், மயிலாடுதுறை தாலுகாவில் கோடங்குடி, திருவிழந்தூர், கொற்கை, இளந்தோப்பு, திருவாளப்புத்தூர், மணல்மேடு-1, கேசிங்கன், 204 திருமங்கலம், நமச்சிவாயபுரத்திலும், தரங்கம்பாடி தாலுகாவில் காளகஸ்தினாபுரம், பெரம்பூர், கீழ்மாத்தூரிலும், சீர்காழி தாலுகாவில் நாங்கூர், குன்னம், மருதங்குடி என தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் 17 நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களுடைய நெல்லினை விற்பனை செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story