பருப்பு வகைகள் விலை குறைவு


பருப்பு வகைகள் விலை குறைவு
x

விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு வகைகளின் விலை குறைந்து காணப்பட்டது.

விருதுநகர்

பாசிப்பருப்பு

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.9,500 முதல் ரூ.10,500 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.300 விலை குறைந்து ரூ.12,500 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.10 ஆயிரம் ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.100 விலை குறைந்து ரூ.10,900 ஆகவும், பாசிப்பயறு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.13 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.3,200 முதல் ரூ.3,500 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.2,800 முதல் ரூ.3,100 வரையிலும் விற்பனை ஆனது. முண்டு வத்தல் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.24 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

கடலை எண்ணெய்

கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.3 ஆயிரம் ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.7,425 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.1,320 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது.

நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.6,200 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,450 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.4,100 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டாலுக்கு ரூ.6,960 ஆகவும், பொரிகடலை 50 கிலோ ரூ.5,100 ஆகவும் விற்பனை ஆனது.

பட்டாணி பருப்பு

மைதா முதல் ரகம் ரூ.4,470 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,460 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,500 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.1420 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,200 முதல் ரூ.6500 வரையிலும் விற்பனை ஆனது.

பட்டாணி பருப்பு ரூ.6,400 ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,100 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.18,900 ஆகவும், ஏ ரகம் ரூ.19,200 ஆகவும், சி ரகம் ரூ.17 ஆயிரம் ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.13,150 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.11,500 ஆகவும் விற்பனையானது.


Next Story