பருப்பு வகைகள் விலை குறைவு


பருப்பு வகைகள் விலை குறைவு
x

விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு வகைகளின் விலை குறைந்து காணப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு வகைகளின் விலை குறைந்து காணப்பட்டது.

வத்தல்

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.9,500 முதல் ரூ.10,500 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.500 விலை குறைந்து ரூ.13 ஆயிரம் ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.200 விலை குறைந்து ரூ.10 ஆயிரம் ஆகவும் விற்பனை ஆனது.

பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.200 விலை குறைந்து ரூ.10,800 ஆகவும், பாசிப்பயறு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.500 விலை குறைந்து ரூ.13 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.3,200 முதல் ரூ.3,500 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.2,800 முதல் ரூ.3,100 வரையிலும் விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.24 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

பட்டாணி

கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.3,050 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.7,425 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.20 விலை குறைந்து ரூ.1,360 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.6 ஆயிரம் ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,450 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.20 விலை உயர்ந்து ரூ.4,100 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டாலுக்கு ரூ.6,960 ஆகவும், பொரிகடலை 50 கிலோ ரூ.5,100 ஆகவும் விற்பனை ஆனது. மைதா முதல் ரகம் ரூ.4,470 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,460 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,500 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.1,420 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,200 முதல் ரூ.6,500 வரையிலும், பட்டாணி பருப்பு ரூ.6,400 ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,100 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.18,900 ஆகவும், ஏ ரகம் ரூ.19,200 ஆகவும், சி ரகம் ரூ.17 ஆயிரம் ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.13,150 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.11,500 ஆகவும் விற்பனையானது.


Next Story