முகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,
சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நாடு முழுவதும் நேற்று 960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று பாதிப்பு 4 மடங்காக உயர்ந்துள்ளது. முகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும். காவல்துறையினர் அபராதம் விதித்துதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை.
கொரோனா தொடங்கிய போது அறிவித்த முக்ககவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற அறிவுறுத்தல்கள் தொடார்ந்து அமலில் தான் உள்ளன. திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியாதவர்கள் மீது நடவடிக்கை இல்லை.
கொரோனா பரவல் குறித்து பெரிய அளவில் பதற்றம் வேண்டாம். மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். நான்கு ஐந்து நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.