தகரையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 296 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷ்ரவன்குமாா் வழங்கினார்


தகரையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 296 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷ்ரவன்குமாா் வழங்கினார்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தகரையில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 296 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன்குமாா் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அடுத்த தகரை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், சின்னசேலம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அன்பு மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் பவித்ரா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், உதயசூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 296 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.

மேலும் பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 105 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றனர். தொடர்ந்து முகாமில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை கண்காட்சி அரங்குகளை கலெக்டர் ஷ்ரவன்குமார், உதயசூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர். இதில் வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், கூட்டுறவு இணைப்பதிவாளர் மீனா அருள், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் திவ்யபாரதி கோம்பையன், ஊராட்சி மன்ற தலைவர் நீலாவதி முருகேசன், தனி தாசில்தார்கள் ரகோத்மன், கமலம், பாலகுரு, தலைமையிடத்து துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் மனோஜ் முனியன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் இந்திரா நன்றி கூறினார்


Next Story