கழிவுநீர் கால்வாயை சரி செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்


கழிவுநீர் கால்வாயை சரி செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்
x

கழிவுநீர் கால்வாயை சரி செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

கழிவுநீர் கால்வாயை சரி செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் காலனி பகுதியிலும், சேவூர் காலனி பகுதியிலும் சுமார் 20 அடி நீள தூரத்திற்கு கழிவுநீர் கால்வாயை இணைக்கும் பணி முடங்கி உள்ளது. சேவூர் காலனி கால்வாயில் ஜல்லி போடப்பட்டு அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடும் அவல நிலை உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது.

இதனை சரி செய்யக்கோரி ராட்டினமங்கலம் காலனி பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்து சேவூர் பஸ் நிறுத்தம் அருகே ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதன் காரணமாக ஆரணி-வேலூர் இடைேய போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்கொண்டன. மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியவர்கள் உடனடியாக லெ்ல முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் வருகை தந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீர் கால்வாய் இணைப்பு பணியை முறையாக முடிக்க ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

அதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 30 நிடிடமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் வாகனங்களை போலீசார் ஒழுங்குபடுத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.========


Next Story