காஞ்சீபுரம் நகர சாலையில் நீண்ட காலமாக திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


காஞ்சீபுரம் நகர சாலையில் நீண்ட காலமாக திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Oct 2023 9:42 AM IST (Updated: 27 Oct 2023 11:50 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் நகர சாலையில் நீண்ட காலமாக திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் நகரின் முக்கிய சாலையாக விளங்கும் காமராஜர் சாலையில், பெரிய காஞ்சீபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சாலையில் தேங்கும் மழைநீர் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களின் கழிவு நீரும் உள்ளே செல்வதால் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் மழைநீர் செல்ல முடியாமல் இருந்து வந்தது.

இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.

நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மழைநீர் வடிகால்வாயை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு நீண்ட காலமான நிலையில் மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கப்படாமலேயே பள்ளி குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் துர்நாற்றம் வீசியப்படி காணப்பட்டது.

மாவட்ட கலெக்டர் முதல் மாநகராட்சி ஆணையர் வரை கடந்து செல்லும் சாலையில் மழைநீர் வடிகால்வாய் திறந்தே உள்ளது.

மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கப்படாததால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவ- மாணவிகள் அதிகம் செல்லும் இடத்தில் மழைநீர் வடிகால்வாய் உள்ள நிலையில் தொற்றுநோய் அல்லது அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும் முன்னர் விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story