ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு


ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க தடை  - மாவட்ட நிர்வாகம் உத்தரவு
x

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்துள்ளார்.

சென்னை,

தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 556 கனஅடியும் என மொத்தமாக வினாடிக்கு 25 ஆயிரத்து 556 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது . வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்துள்ளார்.


Next Story