தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடை - தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு...!


தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடை - தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு...!
x
தினத்தந்தி 3 Aug 2022 2:48 PM IST (Updated: 3 Aug 2022 2:48 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடைவிதித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கிராமப்புறங்களில் முக்கிய அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கும் வழக்கம் வெகுநாட்களாக இருந்து வருகின்றது. வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை, அரசின் முக்கிய அறிவிப்புகள், விழிப்புணர்வு, சுகாதார மற்றும் மருத்துவ அறிவிப்புகள் போன்ற அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டனர்.

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் இந்த தண்டோரா அறிவிப்புகள் தொடர்கின்றனர் என்று விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தலைமை செயலாளர் இறையன்பு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழலில் மக்களுக்கு அரசு கூறும் தகவல்களை தெரிவிக்க தண்டோரா போடும் நடைமுறை இனி தேவையில்லை. தடை மீறி தண்டோரா போட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story