குற்ற வழக்குகளை மறைத்ததால் வக்கீல் தொழில் செய்ய தடை - பார் கவுன்சில் நடவடிக்கை


குற்ற வழக்குகளை மறைத்ததால் வக்கீல் தொழில் செய்ய தடை - பார் கவுன்சில் நடவடிக்கை
x

குற்ற வழக்குகளை மறைத்ததால் வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் வக்கீல் டி.கே.சத்தியசீலன். இவர் மீது கடந்த 2007-ம் ஆண்டு முதல் அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் குறிஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், வேலூர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் அவர் ஆஜராகததால், வேலூர் கோர்ட்டு பிடிவாரண்டும் பிறப்பித்துள்ளது.

இவரது பெயர், அம்பத்தூர் போலீஸ் நிலைய குற்றப்பதிவேட்டில் கடந்த 2008 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குற்ற வழக்குகளை எல்லாம் மறைத்து, பார் கவுன்சிலில் சத்தியசீலன் கடந்த 2014-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்துள்ளார். இதனால், சத்தியசீலனை வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சிலில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.


Next Story