100% கல்வி அறிவு பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே முதல்-அமைச்சரின் இலக்கு - அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்


100% கல்வி அறிவு பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே முதல்-அமைச்சரின் இலக்கு - அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
x

ஏழை, எளிய மக்களை முன்னேற்ற கல்வி மட்டுமே முதல்பாதை என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

மதுரை,

மதுரையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய நிகழ்வில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

தமிழகத்தின் இருமொழிக் கொள்கை இப்போதும் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். பொருளாதார ரீதியாகவும் இருமொழிக்கொள்கை அவசியமானதாக உள்ளது. மாணவர்களின் வளர்ச்சிக்கும், பணிக்கும் இருமொழிக்கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் ஆங்கிலத்தையும் சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் நிதியமைச்சராக இருந்த போது மாநில வங்கி குழு கூட்டத்தை முறையாக நடத்தி, அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தினேன். ஏழை, எளிய மக்களை முன்னேற்ற கல்வி மட்டுமே முதல்பாதை. கல்வியே பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு தெளிவான பாதையை காட்டும். கல்வியினால் வரும் முன்னேற்றம் மற்றும் பாதுபாப்பு வேறு எதிலும் வராது. சமுதாயத்தில் அனைவரும் கல்வி கற்றால் மட்டுமே சிறப்பான வளர்ச்சியை ஒரு மாநிலம் பெற முடியும்.

மற்ற மாநிலங்களில் 18 வயதில் பள்ளி கல்வி அறிவு பெற்றவர்கள் 50 சதவீதமே உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் 90 சதவீதம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 100 சதவிகிதம் கல்வி அறிவு பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே முதல்-அமைச்சரின் இலக்கு. அந்த சாதனையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து முடிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story