பன்றிமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


பன்றிமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் பன்றிமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், அய்யம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு கட்டிடம், கொசவப்பட்டியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சித்தா பிரிவு கட்டிடம் திறப்பு விழா நேற்று முன்தினம் ஆலமரத்துப்பட்டியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், இ.பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 20 மலைக்கிராம பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் ஆடலூர் பன்றிமலை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவுள்ளது என்றார். இந்த விழாவில் சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், எஸ்.காந்திராஜன், ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஆலமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story