சுந்தரராஜ பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்


சுந்தரராஜ பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
x

லால்குடி அருகே சுந்தரராஜ பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின் உப கோவிலாக சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் புதிதாக தேரை உருவாக்க வேண்டும் என்று தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கு அன்பில் கிராமமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, சுந்தரராஜ பெருமாளுக்கு ரூ.80 லட்சம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து தேர் கோவிலை சுற்றிவலம் வந்து நிலையினை அடைந்தது.


Next Story