தாராபுரத்தில் கோவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி பூசாரி பலியானார்.

தாராபுரத்தில் கோவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி பூசாரி பலியானார்.
தாராபுரம்
தாராபுரத்தில் கோவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி பூசாரி பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவில் பூசாரி
திருப்பூர் திருமுருகன் பூண்டி 1-வது வீதி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த தங்கவேல் மகன் பாலசுப்பிரமணி (வயது 58). இவர் தாராபுரம் பழைய கோட்டைமேட்டு தெருவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குலதெய்வமான வீரேஸ்வரா சாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார்.
நேற்று அமாவாசை தினம் என்பதால் திருப்பூரில் இருந்து மதியம் கோவிலுக்கு வந்து கோவிலை சுத்தம் செய்துவிட்டு அங்கு இருந்த மின்விளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
மின்சாரம் தாக்கி பலி
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் பாலசுப்பிரமணி மயங்கி கீழே விழுந்தார். இந்த நிலையில் கோவிலுக்கு பூஜை செய்ய வந்த பக்தர்கள் பூசாரி மயங்கி விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பூசாரி பாலசுப்பிரமணியை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பாலசுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அரசு மருத்துவமனை மற்றும் சம்பவம் நடந்த இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான கோவில் பூசாரி பாலசுப்பிரமணிக்கு ஜமுனா ராணி (50) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமாவாசை நாளிலேயே கோவில் பூசாரி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பழைய கோட்டைமேட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.