பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் பயணம்


பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் பயணம்
x
தினத்தந்தி 14 Jan 2024 7:52 AM IST (Updated: 14 Jan 2024 8:22 AM IST)
t-max-icont-min-icon

பொங்களுக்கு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். நீண்ட விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டன.

அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 12-ம் தேதி முதல் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கியநகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் நேற்று முன்தினம் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2,210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த 50 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

மொத்தம் 7,474 அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும், 2.30 லட்சம் பேர் முன்பதிவு செய்ததாகவும் போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Next Story